Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பசப்புறு பருவரல்

The Pallid Hue

காமத்துப்பால் · LoveKural 1190 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1190

Tamil original

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

நல்காமை தூற்றார் எனின்.

Read the sounds · Transliteration

Pasappenap Perperudhal Nandre Nayappiththaar
Nalkaamai Thootraar Enin

Understand the idea · English meaning

It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).

Connect it to life today · Modern meaning

If no one blames the beloved who persuaded me to let him go, I would rather be known as the woman who turned pale. When people protect the person who left, even being known for the sadness feels preferable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.

Kalaignar

கலைஞர் : என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!