Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

தனிப்படர் மிகுதி

The Solitary Anguish

காமத்துப்பால் · LoveKural 1196 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1196

Tamil original

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல

இருதலை யானும் இனிது.

Read the sounds · Transliteration

Orudhalaiyaan Innaadhu Kaamamkaap Pola
Irudhalai Yaanum Inidhu

Understand the idea · English meaning

Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.

Connect it to life today · Modern meaning

Love hurts when it rests on one side alone, like a kavadi carried with weight at only one end; it is joyful when both sides carry it. A relationship works best when both people make an effort.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.

Kalaignar

கலைஞர் : காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்