Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நினைந்தவர் புலம்பல்

Sad Memories

காமத்துப்பால் · LoveKural 1201 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1201

Tamil original

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.

Read the sounds · Transliteration

Ullinum Theeraap Perumakizh Seydhalaal
Kallinum Kaamam Inidhu

Understand the idea · English meaning

Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.

Connect it to life today · Modern meaning

Love can be sweeter than alcohol because its happiness can return whenever we remember it. A special moment with someone you love may still warm you long after the evening is over.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.

Kalaignar

கலைஞர் : உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்