நினைந்தவர் புலம்பல்
Sad Memories
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Marappin Evanaavan Markol Marappariyen
Ullinum Ullam Sutum
Understand the idea · English meaning
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?
Connect it to life today · Modern meaning
Even remembering their past happiness makes her heart ache, but she cannot imagine forgetting it. An old photo may hurt because it brings back what was lost, yet deleting it can feel impossible.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : ( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?
Kalaignar
கலைஞர் : மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?