Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பொழுதுகண்டு இரங்கல்

Lamentations at Eventide

காமத்துப்பால் · LoveKural 1226 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1226

Tamil original

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த திலேன்.

Read the sounds · Transliteration

Maalainoi Seydhal Manandhaar Akalaadha
Kaalai Arindha Thilen

Understand the idea · English meaning

Previous to my husband’s departure, I know not the painful nature of evening.

Connect it to life today · Modern meaning

Before her beloved left, she never knew that evening could be so painful. A familiar time of day can change completely after a breakup or a long separation.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

Kalaignar

கலைஞர் : மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை