Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

உறுப்புநலன் அழிதல்

Wasting Away

காமத்துப்பால் · LoveKural 1234 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1234

Tamil original

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.

Read the sounds · Transliteration

Panaineengip Paindhoti Sorum Thunaineengith
Tholkavin Vaatiya Thol

Understand the idea · English meaning

In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.

Connect it to life today · Modern meaning

After her companion leaves, her former beauty fades and her bracelets grow loose on her thinner arms. Long stress and sadness can affect the body as well as the heart.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.

Kalaignar

கலைஞர் : பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக