Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

உறுப்புநலன் அழிதல்

Wasting Away

காமத்துப்பால் · LoveKural 1237 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1237

Tamil original

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூசல் உரைத்து.

Read the sounds · Transliteration

Paatu Perudhiyo Nenje Kotiyaarkken
Vaatudhot Poosal Uraiththu

Understand the idea · English meaning

Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?

Connect it to life today · Modern meaning

She asks her heart whether telling the absent beloved about her fading body would bring it any real honour or relief. Writing one more message to someone who is not listening may only expose the pain without changing the situation.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?

Kalaignar

கலைஞர் : நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?