Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நிறையழிதல்

Reserve Overcome

காமத்துப்பால் · LoveKural 1254 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1254

Tamil original

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்

மறையிறந்து மன்று படும்.

Read the sounds · Transliteration

Niraiyutaiyen Enpenman Yaanoen Kaamam
Maraiyirandhu Mandru Patum

Understand the idea · English meaning

I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.

Connect it to life today · Modern meaning

A person may think they are emotionally controlled, yet love can become obvious to everyone. Friends may notice when someone keeps checking their phone for one particular person.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.

Kalaignar

கலைஞர் : மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே