Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அடக்கமுடைமை

The Possession of Self-restraint

அறத்துப்பால் · VirtueKural 127 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 127

Tamil original

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Read the sounds · Transliteration

Yaakaavaa Raayinum Naakaakka Kaavaakkaal
Sokaappar Sollizhukkup Pattu

Understand the idea · English meaning

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.

Connect it to life today · Modern meaning

Even if you can't manage to control everything else about yourself, at least guard what comes out of your mouth, because careless words cause damage that's hard to undo. For example, someone who can't always control their mood can still choose to stay quiet instead of snapping at a friend, avoiding an argument that didn't need to happen.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

Kalaignar

கலைஞர் : ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்