Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அடக்கமுடைமை

The Possession of Self-restraint

அறத்துப்பால் · VirtueKural 128 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 128

Tamil original

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.

Read the sounds · Transliteration

Ondraanun Theechchol Porutpayan Untaayin
Nandraakaa Thaaki Vitum

Understand the idea · English meaning

If a man’s speech be productive of a single evil, all the good by him will be turned into evil.

Connect it to life today · Modern meaning

A single cruel or careless remark can undo the goodwill built by everything kind you've said before it. People tend to remember the one sharp comment more than the many gentle ones. For example, a manager who gives ten pieces of encouraging feedback can lose an employee's trust with just one humiliating comment made in front of others.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

Kalaignar

கலைஞர் : ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்