குறிப்பறிவுறுத்தல்
The Reading of the Signs
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Peridhaatrip Petpak Kalaththal Aridhaatri
Anpinmai Soozhva Thutaiththu
Understand the idea · English meaning
The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.
Connect it to life today · Modern meaning
A warm reunion after a long separation may still carry the fear that the affection will not last. When a partner has often left again, even a loving embrace can make the other person worry about another goodbye.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.
Kalaignar
கலைஞர் : ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே