புணர்ச்சி விதும்பல்
Desire for Reunion
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan
Pazhikaanen Kanta Itaththu
Understand the idea · English meaning
Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband’s fault (just) when I meet him.
Connect it to life today · Modern meaning
When we finally meet someone we missed, their faults can disappear from our attention, just as eyes do not see the pencil applying their makeup. A partner may prepare to discuss an old hurt but forget it during the joy of reunion.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.
Kalaignar
கலைஞர் : கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்