Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புணர்ச்சி விதும்பல்

Desire for Reunion

காமத்துப்பால் · LoveKural 1288 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1288

Tamil original

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு.

Read the sounds · Transliteration

Iliththakka Innaa Seyinum Kaliththaarkkuk
Kallatre Kalvanin Maarpu

Understand the idea · English meaning

O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.

Connect it to life today · Modern meaning

A beloved's embrace can feel intoxicating even after it has brought painful embarrassment. After a hurtful quarrel, someone may still be drawn back to the comfort of the person's arms.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.

Kalaignar

கலைஞர் : என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு