Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நெஞ்சோடு புலத்தல்

Expostulation with Oneself

காமத்துப்பால் · LoveKural 1291 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1291

Tamil original

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா தது.

Read the sounds · Transliteration

Avarnenju Avarkkaadhal Kantum Evannenje
Neeemakku Aakaa Thadhu

Understand the idea · English meaning

O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?

Connect it to life today · Modern meaning

The heart may keep following someone even after seeing that person is guided only by their own feelings. Someone may continue checking an indifferent person's messages despite knowing that the care is not mutual.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?

Kalaignar

கலைஞர் : நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?