அடக்கமுடைமை
The Possession of Self-restraint
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
Read the sounds · Transliteration
Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi
Arampaarkkum Aatrin Nuzhaindhu
Understand the idea · English meaning
Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger.
Connect it to life today · Modern meaning
Good fortune tends to find its way to someone who keeps their temper in check, keeps learning, and practices real self-control, almost as if virtue itself is looking for the right person to reward. For example, a calm, well-prepared student who doesn't panic under pressure often finds opportunities open up for them that never seem to come to more reactive people.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.
Kalaignar
கலைஞர் : கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்