Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புலவி

Pouting

காமத்துப்பால் · LoveKural 1307 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1307

Tamil original

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்று கொல் என்று.

Read the sounds · Transliteration

Ootalin Untaangor Thunpam Punarvadhu
Neetuva Thandru Kol Endru

Understand the idea · English meaning

The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.

Connect it to life today · Modern meaning

Even a playful quarrel can hurt when you fear that closeness may not return. After an argument, wondering whether your partner will still come back can make the waiting especially painful.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.

Kalaignar

கலைஞர் : கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு