Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

ஊடலுவகை

The Pleasures of Temporary Variance

காமத்துப்பால் · LoveKural 1321 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1321

Tamil original

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்லது அவர்அளிக்கு மாறு.

Read the sounds · Transliteration

Illai Thavaravarkku Aayinum Ootudhal
Valladhu Avaralikku Maaru

Understand the idea · English meaning

Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.

Connect it to life today · Modern meaning

A small, honest disagreement can make affection more visible, even when neither person has done wrong. After a couple calmly raises a minor concern and makes up, both may feel more valued.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.

Kalaignar

கலைஞர் : எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது