Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புலவி நுணுக்கம்

Feigned Anger

காமத்துப்பால் · LoveKural 1320 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1320

Tamil original

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீர் என்று.

Read the sounds · Transliteration

Ninaiththirundhu Nokkinum Kaayum Anaiththuneer
Yaarulli Nokkineer Endru

Understand the idea · English meaning

Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, “With whose thought have you (thus) looked on my person?”

Connect it to life today · Modern meaning

When jealousy is active, even admiration can be misunderstood as comparison. Gazing at a partner's beauty may still prompt the question, 'Whom are you thinking of when you look at me?'

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள்.

Kalaignar

கலைஞர் : ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்