Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

ஊடலுவகை

The Pleasures of Temporary Variance

காமத்துப்பால் · LoveKural 1324 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1324

Tamil original

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை.

Read the sounds · Transliteration

Pulli Vitaaap Pulaviyul Thondrumen
Ullam Utaikkum Patai

Understand the idea · English meaning

In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.

Connect it to life today · Modern meaning

Even after a warm embrace, prolonged silence can strike at the heart. If someone keeps a loved one waiting after they have nearly made peace, that delay can become the sharpest part of the quarrel.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.

Kalaignar

கலைஞர் : இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது