Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

ஊடலுவகை

The Pleasures of Temporary Variance

காமத்துப்பால் · LoveKural 1325 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1325

Tamil original

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து.

Read the sounds · Transliteration

Thavarilar Aayinum Thaamveezhvaar Mendrol
Akaralin Aangon Rutaiththu

Understand the idea · English meaning

Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.

Connect it to life today · Modern meaning

Even an innocent partner may find a strange sweetness in being kept apart briefly by someone they love; the pause heightens the joy of reunion. After a harmless disagreement, waiting a little before the next embrace can make it feel more precious.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.

Kalaignar

கலைஞர் : தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது