Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

ஊடலுவகை

The Pleasures of Temporary Variance

காமத்துப்பால் · LoveKural 1329 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1329

Tamil original

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா.

Read the sounds · Transliteration

Ootuka Manno Oliyizhai Yaamirappa
Neetuka Manno Iraa

Understand the idea · English meaning

May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!

Connect it to life today · Modern meaning

He wishes the night would last so he can gently persuade his beloved to end her playful anger. At the end of an evening together, asking for a little more time can make reconciliation feel especially dear.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.

Kalaignar

கலைஞர் : ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக