Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

ஊடலுவகை

The Pleasures of Temporary Variance

காமத்துப்பால் · LoveKural 1330 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1330

Tamil original

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.

Read the sounds · Transliteration

Ootudhal Kaamaththirku Inpam Adharkinpam
Kooti Muyangap Perin

Understand the idea · English meaning

Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.

Connect it to life today · Modern meaning

A loving disagreement can add warmth to romance, and reconciliation completes it. After a couple resolves a quarrel with a heartfelt embrace, both the tension and the reunion can feel meaningful.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.

Kalaignar

கலைஞர் : ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்