Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

ஒழுக்கமுடைமை

The Possession of Decorum

அறத்துப்பால் · VirtueKural 134 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 134

Tamil original

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

Read the sounds · Transliteration

Marappinum Oththuk Kolalaakum Paarppaan
Pirappozhukkang Kundrak Ketum

Understand the idea · English meaning

A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.

Connect it to life today · Modern meaning

Knowledge you've forgotten can usually be relearned with enough effort, but a reputation ruined by bad conduct is far harder to recover. What you know matters less than how you act. For example, a doctor who forgets a textbook detail can look it up again, but one caught cheating patients loses a kind of trust that's nearly impossible to rebuild.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

Kalaignar

கலைஞர் : பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்