பொறையுடைமை
The Possession of Patience, Forbearance
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Unnaadhu Norpaar Periyar Pirarsollum
Innaachchol Norpaarin Pin
Understand the idea · English meaning
Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speechof others.
Connect it to life today · Modern meaning
Fasting and other extreme forms of self-denial are impressive, but they still rank just below the discipline of tolerating other people's harsh words without losing your composure. Patience under insult is its own kind of hard-won achievement. For example, someone who can calmly shrug off a public insult without needing to fire back is showing a kind of self-control that's harder to master than many physical challenges.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.
Kalaignar
கலைஞர் : பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்