Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

புறங்கூறாமை

Not Backbiting

அறத்துப்பால் · VirtueKural 184 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 184

Tamil original

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்னின்று பின்நோக்காச் சொல்.

Read the sounds · Transliteration

Kannindru Kannarach Chollinum Sollarka
Munnindru Pinnokkaach Chol

Understand the idea · English meaning

Though you speak without kindness before another’s face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.

Connect it to life today · Modern meaning

It's fine to tell someone something critical honestly, to their face, even if it's not gentle. But don't say things about them behind their back without thinking through the damage it could cause once it gets around. For example, telling a friend directly that their behaviour upset you is fair; complaining about them to everyone else while acting normal around them is not.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

Kalaignar

கலைஞர் : நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு