ஒப்புரவறிதல்
Duty to Society
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Itanil Paruvaththum Oppuravirku Olkaar
Katanari Kaatchi Yavar
Understand the idea · English meaning
The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.
Connect it to life today · Modern meaning
People who truly understand their duty to others don't stop helping just because their own resources are running low. Real commitment to others doesn't depend on convenience. For example, a family going through a tough financial patch might still find a way to share a meal with someone who has even less.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.
Kalaignar
கலைஞர் : தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்