Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கூடா ஒழுக்கம்

Imposture

அறத்துப்பால் · VirtueKural 271 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 271

Tamil original

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

Read the sounds · Transliteration

Vanja Manaththaan Patitrozhukkam Poodhangal
Aindhum Akaththe Nakum

Understand the idea · English meaning

The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man.

Connect it to life today · Modern meaning

A dishonest person who pretends to be virtuous cannot hide the truth from himself; it is as if the very elements of his body were laughing at the act. False goodness is still deception. For example, someone who posts about integrity while cheating in private eventually exposes the gap.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.

Kalaignar

கலைஞர் : ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்