The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
Read the sounds · Transliteration
Valiyil Nilaimaiyaan Valluruvam Petram
Puliyindhol Porththumeyn Thatru
Understand the idea · English meaning
The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger’s skin.
Connect it to life today · Modern meaning
A person who cannot control the mind but wears a powerful spiritual image is like a cow hiding under a tiger skin while grazing. Appearance can frighten or impress people, but it does not change what is underneath. For example, acting tough or holy while giving in to every impulse is only a disguise.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.
Kalaignar
கலைஞர் : மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்