Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கொல்லாமை

Not killing

அறத்துப்பால் · VirtueKural 322 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 322

Tamil original

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

Read the sounds · Transliteration

Pakuththuntu Palluyir Ompudhal Noolor
Thokuththavatrul Ellaan Thalai

Understand the idea · English meaning

The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.

Connect it to life today · Modern meaning

The greatest virtue is to share what you have and help many living beings continue safely. Food and resources become truly meaningful when they support more than one person. For example, sharing a meal and helping protect an injured animal both turn what you have into care for life.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

Kalaignar

கலைஞர் : இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை