The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
Read the sounds · Transliteration
Uyir Utampin Neekkiyaar Enpa
Seyir Utampin Sellaaththee Vaazhkkai
Understand the idea · English meaning
(The wise) will say that men of diseased bodies, who live in degradation who separated the life from the body of animals (in a former birth)
Connect it to life today · Modern meaning
In the verse's ancient moral view, sages connect a life marked by severe illness and degradation with the consequences of killing in an earlier life. The teaching treats cruelty as a serious act whose effects do not simply disappear. For example, it reminds us that no violent choice should be dismissed as harmless or consequence-free.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.
Kalaignar
கலைஞர் : வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்