Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

துறவு

Renunciation

அறத்துப்பால் · VirtueKural 346 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 346

Tamil original

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.

Read the sounds · Transliteration

Yaan Enadhu Ennum Serukku
Aruppaan Vaanorkku Uyarndha Ulakam

Understand the idea · English meaning

He who destroys the pride which says “I”, “mine” will enter a world which is dificult even to the Gods to attain.

Connect it to life today · Modern meaning

The person who cuts away the pride of “I” and “mine” reaches a state described as higher than even the gods can attain. Freedom begins when the self is no longer built around ownership and ego. For example, sharing credit for a team success instead of claiming it all is a small step away from “mine.”

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

Kalaignar

கலைஞர் : யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்