Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

மெய்யுணர்தல்

Truth-Conciousness

அறத்துப்பால் · VirtueKural 353 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 353

Tamil original

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து.

Read the sounds · Transliteration

Aiyaththin Neengith Thelindhaarkku Vaiyaththin
Vaanam Naniya Thutaiththu

Understand the idea · English meaning

Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.

Connect it to life today · Modern meaning

When honest questioning leads to clear understanding, a higher and more hopeful way of living can feel close. For example, researching a difficult choice can replace uncertainty with confidence about the path ahead.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

Kalaignar

கலைஞர் : ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்