Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

ஊழ்

Fate

அறத்துப்பால் · VirtueKural 375 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 375

Tamil original

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு.

Read the sounds · Transliteration

Nallavai Ellaaan Theeyavaam Theeyavum
Nallavaam Selvam Seyarku

Understand the idea · English meaning

In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).

Connect it to life today · Modern meaning

When building wealth, circumstances can turn an apparently good plan into a loss, or an unlikely plan into a success. For example, a careful small business may struggle because of events beyond its control, while an unexpected opportunity helps another one grow.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.

Kalaignar

கலைஞர் : நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்