Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கல்வி

Learning

பொருட்பால் · WealthKural 397 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 397

Tamil original

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.

Read the sounds · Transliteration

Yaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan
Saandhunaiyung Kallaadha Vaaru

Understand the idea · English meaning

How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?

Connect it to life today · Modern meaning

Learning helps a person feel at home in every country and town, so there is little reason to stop learning while life continues. For example, knowing other languages and customs can help someone make friends wherever they travel.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?

Kalaignar

கலைஞர் : கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?