Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கேள்வி

Hearing

பொருட்பால் · WealthKural 416 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 416

Tamil original

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

Read the sounds · Transliteration

Enaiththaanum Nallavai Ketka Anaiththaanum
Aandra Perumai Tharum

Understand the idea · English meaning

Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.

Connect it to life today · Modern meaning

Even a small piece of good instruction can add lasting dignity and strength. For example, one helpful suggestion from a teacher may turn an ordinary presentation into a clear and confident one.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.

Kalaignar

கலைஞர் : நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்