Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

குற்றங்கடிதல்

The Correction of Faults

பொருட்பால் · WealthKural 440 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 440

Tamil original

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

Read the sounds · Transliteration

Kaadhala Kaadhal Ariyaamai Uykkirpin
Edhila Edhilaar Nool

Understand the idea · English meaning

If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.

Connect it to life today · Modern meaning

Keep important plans private until they are ready, because careless disclosure can give opponents a chance to interfere. For example, a small business may protect a new product idea until it is prepared to launch it.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.

Kalaignar

கலைஞர் : தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்