Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

குற்றங்கடிதல்

The Correction of Faults

பொருட்பால் · WealthKural 439 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 439

Tamil original

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.

Read the sounds · Transliteration

Viyavarka Egngnaandrum Thannai Nayavarka
Nandri Payavaa Vinai

Understand the idea · English meaning

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.

Connect it to life today · Modern meaning

Do not become dazzled by your own importance, and do not chase actions that bring no real benefit. For example, a team leader can skip a flashy project for likes and choose work that genuinely helps people.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

Kalaignar

கலைஞர் : எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது