குற்றங்கடிதல்
The Correction of Faults
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Patrullam Ennum Ivaranmai Etrullum
Ennap Patuvadhon Randru
Understand the idea · English meaning
Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).
Connect it to life today · Modern meaning
Extreme stinginess is more than an ordinary fault because it prevents wealth from doing any good. For example, someone who refuses every necessary repair may eventually lose far more than the cost of fixing the problem.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.
Kalaignar
கலைஞர் : எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்