Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெரியாரைத் துணைக்கோடல்

Seeking the Aid of Great Men

பொருட்பால் · WealthKural 442 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 442

Tamil original

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.

Read the sounds · Transliteration

Utranoi Neekki Uraaamai Murkaakkum
Petriyaarp Penik Kolal

Understand the idea · English meaning

Let (a king) procure and kindly care for men who can overcome dificulties when they occur, and guard against them before they happen.

Connect it to life today · Modern meaning

Keep close to people who can solve present problems and prevent the same problems from returning. For example, an experienced teammate can fix a failing project and help the group build a better process for next time.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.

Kalaignar

கலைஞர் : வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்