Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வலியறிதல்

The Knowledge of Power

பொருட்பால் · WealthKural 471 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 471

Tamil original

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

Read the sounds · Transliteration

Vinaivaliyum Thanvaliyum Maatraan Valiyum
Thunaivaliyum Thookkich Cheyal

Understand the idea · English meaning

Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.

Connect it to life today · Modern meaning

Before acting, weigh the task, your own strength, the other side’s strength, and the support available to both. For example, a small team should check its skills and resources before taking on a major competitor.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

Kalaignar

கலைஞர் : செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்