தெரிந்து செயல்வகை
Acting after due Consideration
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Ellaadha Ennich Cheyalventum Thammotu
Kollaadha Kollaadhu Ulaku
Understand the idea · English meaning
Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.
Connect it to life today · Modern meaning
Choose actions that fit your role and will not bring justified disrespect. For example, a team leader should keep promises instead of making flashy claims they cannot fulfill.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.
Kalaignar
கலைஞர் : தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்