Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

காலம் அறிதல்

Knowing the fitting Time

பொருட்பால் · WealthKural 487 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 487

Tamil original

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

Read the sounds · Transliteration

Pollena Aange Puramveraar Kaalampaarththu
Ulverppar Olli Yavar

Understand the idea · English meaning

The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.

Connect it to life today · Modern meaning

Wise people do not display anger at once; they stay calm and choose a useful moment to respond. For example, pausing before replying to an insulting message can prevent a needless argument.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.

Kalaignar

கலைஞர் : பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்