Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சுற்றந் தழால்

Cherishing Kinsmen

பொருட்பால் · WealthKural 521 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 521

Tamil original

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள.

Read the sounds · Transliteration

Patratra Kannum Pazhaimaipaa Raattudhal
Sutraththaar Kanne Ula

Understand the idea · English meaning

Even when (a man’s) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).

Connect it to life today · Modern meaning

True relatives and close friends keep showing care even when someone has lost money or status. For example, a family may welcome a relative home after a failed business instead of valuing them only for what they owned.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

Kalaignar

கலைஞர் : ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்