Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சுற்றந் தழால்

Cherishing Kinsmen

பொருட்பால் · WealthKural 529 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 529

Tamil original

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும்.

Read the sounds · Transliteration

Thamaraakik Thatrurandhaar Sutram Amaraamaik
Kaaranam Indri Varum

Understand the idea · English meaning

Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him.

Connect it to life today · Modern meaning

People who left after a conflict may return when the reason for the conflict is gone, especially if you were not the cause. For example, a friend who stepped away during a misunderstanding may reconnect after the truth becomes clear.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.

Kalaignar

கலைஞர் : உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்