Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சுற்றந் தழால்

Cherishing Kinsmen

பொருட்பால் · WealthKural 530 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 530

Tamil original

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத் திருந்து எண்ணிக் கொளல்.

Read the sounds · Transliteration

Uzhaippirindhu Kaaranaththin Vandhaanai Vendhan
Izhaith Thirundhu Ennik Kolal

Understand the idea · English meaning

When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again.

Connect it to life today · Modern meaning

When someone who left returns, listen carefully to why they came back before restoring the relationship. For example, welcome a former teammate who wants to rejoin, but first understand what changed and what support they need.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.

Kalaignar

கலைஞர் : ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்