பொச்சாவாமை
Unforgetfulness
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Tamil original
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
Read the sounds · Transliteration
Pochchaappaark Killai Pukazhmai Adhuulakaththu
Eppaalnoo Lorkkum Thunivu
Understand the idea · English meaning
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
Connect it to life today · Modern meaning
A person who is careless and forgetful cannot build lasting respect. For example, a student who never prepares, misses commitments, and ignores details will not be trusted with an important role.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.
Kalaignar
கலைஞர் : மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்