Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

செங்கோன்மை

The Right Sceptre

பொருட்பால் · WealthKural 549 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 549

Tamil original

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.

Read the sounds · Transliteration

Kutipurang Kaaththompik Kutram Katidhal
Vatuvandru Vendhan Thozhil

Understand the idea · English meaning

In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.

Connect it to life today · Modern meaning

Protecting people and correcting serious wrongdoing are duties of leadership, not signs of weakness. For example, a school must stop bullying and apply a fair consequence even when the student responsible is popular.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.

Kalaignar

கலைஞர் : குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்