The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Ellaarkkum Ellaam Nikazhpavai Egngnaandrum
Vallaridhal Vendhan Thozhil
Understand the idea · English meaning
It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.
Connect it to life today · Modern meaning
A ruler must stay informed about what is happening among all groups, not just hear flattering reports. A mayor who checks conditions in every neighborhood can respond before a small problem becomes a crisis.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.
Kalaignar
கலைஞர் : நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்