Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

ஒற்றாடல்

Detectives

பொருட்பால் · WealthKural 587 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 587

Tamil original

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று.

Read the sounds · Transliteration

Maraindhavai Ketkavar Raaki Arindhavai
Aiyappaatu Illadhe Otru

Understand the idea · English meaning

A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.

Connect it to life today · Modern meaning

Good investigation uncovers what is hidden and separates solid facts from doubt. Before sharing a serious accusation online, check the original evidence and confirm what actually happened.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.

Kalaignar

கலைஞர் : மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்