Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

ஒற்றாடல்

Detectives

பொருட்பால் · WealthKural 588 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 588

Tamil original

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

Read the sounds · Transliteration

Otrotrith Thandha Porulaiyum Matrumor
Otrinaal Otrik Kolal

Understand the idea · English meaning

Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

Connect it to life today · Modern meaning

Important information should be checked independently before a ruler acts on it. Before reposting a shocking claim, compare it with a reliable second source.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.

Kalaignar

கலைஞர் : ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்